Komal Swaminathan

Komal Swaminathan is a multi faceted Personality -a Congress Activist in his early years, a noted Tamil Theater personality, Film Director, and a journalist. He joined the school of S.V. Sahasranamam and learnt the art of play writing and stage techniques. In 1971, he formed his own theatre group ‘Stage Friends’ with a team of like-minded enthusiasts.

He has penned and staged nearly 33 plays, a few for othertheatre groups also. Komal believed in realistic theatre that would reflect the travails of the common man. Many of his plays deal with the larger issues of society and the politics of exclusion and exploitation.

Apart from the plays, Komal has written and directed few films.

In his direction, ‘Oru Indhiya Kanavu’ won the President’s award for best regional film in Tamil in 1984. Nearly a dozen of his plays have been translated into films. A member of the jury in the national film festivals of 1986 and 1991, the writer has also penned a number of successful TV plays and ten short stories.

Tamil Annai award for contribution to Tamil literature was given to him by the Tamil University, Thanjavur and he received the Agni Akshara award for best playwright.

He was the editor of Subhamangala -a Literary, Socio-Cultural Tamil monthly magazine, run by Shriram group in the period 1990 -1995, was very popular among Literary circle.

The Hindu – 29 Nov 2012 – Kousalya Santhanam mentions :

“I met Komal Swaminathan, a towering figure in Tamil theatre for an exclusive interview in August 1995 just a couple of months before he passed away. Anyone who met the playwright- film script writer- director-journalist could not but be struck by how lightly he carried his fame and multifaceted talent. “Well- made traditional theatre is what I believe in, not the abstract kind,” he told me.”

கோமல் சுவாமிநாதன் – பேச்சாளர், எழுத்தாளர், சிந்தனையாளர், நாடகப் படைப்பாளி, சினிமா இயக்குனர், பத்திரிகையாளர் எனப் பலபரிமாணம் கொண்டவர். குறிப்பாக, தமிழ் நாடக உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர்.

1935-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி, காரைக்குடியில் பிறந்தவர். மதுரையில் கல்லூரிப் படிப்பை முடித்தார். 1952-களில் கர்ம வீரர் காமராஜருடன் பல காங்கிரஸ் பொதுக்கூட்ட மேடைகளில் பேசத்தொடங்கினார். அவரின் ஆவேசப் பேச்சாற்றலால் ‘கோடையிடிக்கோமல்’ என்று அடைமொழியோடு அழைக்கப்பட்டார்.

1957 ல்நாடக ஆசையால், ஊரைவிட்டு வந்து சென்னையில் எஸ். வி. சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் நாடகக்குழுவில் சேர்ந்தார். சேவா ஸ்டேஜுக்காக புதிய பாதை, மின்னல் கோலம், தில்லை நாயகம் ஆகிய நாடகங்களை எழுதினார்.

திரைத்துறையில் நுழைந்த கோமல் 1963ல் கே. எஸ். கோபாலகிருஷ்ணனின் கற்பகம், கைகொடுத்த தெய்வம் மற்றும் இந்தியில் தயாரிக்கப்பட்ட “சாரதா’ படத்திலும் வசன உதவியாளராகப் பணியாற்றினார்.

1971ல் “ஸ்டேஜ்பிரண்ட்ஸ்’ என்னும் நாடகக் குழுவை சொந்தமாக உருவாக்கிய கோமல் சுவாமிநாதன், ஆரம்பகாலங்களில் நகைச்சுவை நாடகங்களையும், குடும்ப நாடகங்களையும் மேடையேற்றினார். கோமல், பின்னாட்களில் சமூக பிரச்சனைகளை மையமாகக் கொண்ட நாடகங்களையே எழுதி மேடையேற்றினார்.
அப்படிப்பட்ட நாடகங்களில் ஒன்றுதான் , 80களில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நாடகதுறையில் ஒரு மைல்கல்லாக விளங்கிய ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகம்.

அதுவரை தமிழ்நாடக உலகம் பார்த்திராத ஒருமேடையை, ஒரு கிராமத்தை, ஒருசமுதாயஅவலத்தை, ஆணித்தரமான வசனங்களால் நாடக ஆர்வலர்களிடம் கொண்டு சேர்த்தது இந்தநாடகம். அரங்கேற்றத்துக்கே பலதடைகளைச் சந்தித்தது இந்நாடகம்.

பின்பு இந்தியா முழுவதும் 200  முறைகளுக்கு மேல் மேடையேறிய இந்நாடகம் பின்னாளில் கே. பாலச்சந்தர் அவர்களால் திரைப்படமாகவும் இயக்கப்பட்டு இவருக்குப் பெரும்புகழ் சேர்த்தது. திரைப்படமும் எத்தனையோ பல இடஞ்சல்களையும் தடைகளையும் உடைத்தெறிந்து வெற்றிப்பாதையில் நடைபோட்டு, சிறந்த திரைக்கதைக்கான விருதையும் பெற்றது.

அதைத் தொடர்ந்து அவரது பல நாடகங்கள் திரைப்படமாக்கப்பட்டன. கோமல், அனல்காற்று (1982), ஓர் இந்தியக்கனவு (1983) ஆகிய படங்களை இயக்கினார். ஒரு இந்தியக்கனவு திரைப்படத்திற்கு மாநில சிறந்த திரைப்படத்திற்கான விருது வழங்கப்பட்டது.

இந்திய அரசின் சிறந்த படங்களை தேர்வு செய்யும் குழுவின் நடுவராக பலமுறை நியமிக்கப்பட்டிருக்கிறார். பல திரைப்பட விழாக்களில் அழைப்பின் பேரில், சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டவர்.

பாதல்சர்கார், மற்றும் பல பெங்காலி நாடகங்களால் ஈர்க்கப்பட்டவர் கோமல். பல வெளிநாடு நாடகங்களாலும் ஈர்க்கப்பட்டு, மேடை அரங்கில் பல புதுமைகளைப் புகுத்தினார். ‘அஞ்சுபுலி ஒருபெண்’ மற்றும் ‘யுத்தகாண்டம்’ நாடகங்களில் பிரமிக்கத்தக்க வகையில் காட்சி அமைப்பு இருக்கும்.

கோமல் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். நாடகம், திரைப்படம் இலக்கியம் போன்ற பண்பாட்டுத்துறையில் முற்போக்குக் கருத்துக்களின் வெற்றிக்கு தன் பங்களிப்பை செலுத்தினார்.

வாழ்க்கையின் இறுதி 5 ஆண்டுகளில் கோமல் ஸ்ரீராம் சிட்பண்ட்ஸ் நிறுவனம் நடத்திவந்த சுபமங்களா இதழை எடுத்து இலக்கிய இதழாக நடத்தினார். சுபமங்களா தமிழில் மிகப்பெரிய இலக்கிய அலையை உருவாக்கிய இதழ்.

ஒரு பத்திரிகையாளராக , இலங்கைக்குப் பயணம் செய்து, ஈழத்தமிழ் சார்ந்த இலங்கை அன்பர்களைச் சந்தித்தார். அங்கு சொற்பொழிவாற்றினார்.

‘கலைமாமணி’ மற்றும் பல விருதுகளைப் பெற்ற கோமல் சுவாமிநாதன், 1995-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி இம்மண்ணை விட்டுச் சென்றார். சமூக பொறுப்புமிக்க ஒரு கலைஞராக தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டார்.

News & Articles

I’m thoroughly satisfied with Thanneer, Thanneer

Komal Swaminathan has in the last 10 years emerged as a force on the Tamil stage. His 26 plays, mostly…

Read more

Tamil Director Komal Swaminathan

Komal Swaminathan is a Tamil Theater personality, and his work is commendable and highly appreciated…

Read more